Test blog

விட்டு விட்டு தான் நினைக்கிறேன்…
விட்டு விட தான் நினைக்கிறேன்…
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது…
உன் அழகான நினைவுகள்…

மை தீட்டி வந்தவளே…!
என் மனதை களவாடி சென்றவளே…!
மதி மயங்கி நின்றவனை…!
உன் மாய விழியால் வென்றவளே…!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே…!
நீ இமை சிமிட்டி பேசியதால்…!
என் இளமை சிதைந்து தான் போனதடி…!
இத்தனை அழகு உன்னிடம்…!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்…!

மாலை முடிந்தும் மறையாத சூரியன் – நீ..!
என் இதயத்தின் ஒளிவட்டம் – நீ..!
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் – நீ..!
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் – நீ..!
என் இரவுகளின் துளி வெளிச்சம் – நீ..!
ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை – நீ..!
என் இதயம் என் காதல் என் வாழ்க்கை – நீ தான்..!

எந்த மலரிலும்
உணரவில்லை
நீ கொடுத்த இந்த….
பூவின் நறுமணத்தை

ஒற்றை
முத்தத்தில்
அரங்கேற்றினான்
மொத்த….
ஆசைகளையும்

சொல்லத்தயங்கும்
ஆசைகளையெல்லாம்
கோர்க்கின்றேன்
உன்னிடம்
சேர்த்திட…

உன்
விழிகள் பேசிட
என்
மொழியும்
நாணம் கொண்டது…

தேய்பிறையாய்
நானிருந்தேன்
வள்ர்பிறையாய்
என் வாழ்வில்
வந்தாய்…

உனை
வர்ணிக்கும் போதே
கவிதையும்
கொஞ்சம் வெட்கப்படுகிறது

அன்பே
நீ-தொட்டால்
தகரமும்-தங்கமாகும்
பூனையும்—-புலியாகும்
நான்-என்ன-ஆவேனோ…???

முப்பது நிமிடம் தாமதமாய் வந்த
என்னை திட்டுகிறாய் நீ…!
முப்பத் ஐந்தது வருடம்
தாமதமாய் வந்த உன்னை
எதுவுமே சொல்லாமல்
அனுசரித்துக் கொள்கிறது என் காதல்…!

யோசித்து எழுதும் கவிதைகள்
வெறும் வார்த்தைகள் ஆகிவிடுகிறது
நீ பேசும் வார்த்தைகள்
கவிதை ஆகிவிடுகிறது எனக்கு…!

போதை ஏற்றும் உன் கண்கள்
என் ஐம்புலன்களையும் அடங்கி
மூர்ச்சையாக்கி விடுகிறது என்னை

கடவுளிடம் தவமிருந்து பெறப்படும்
பெண்களுக்கு மத்தியில்
கடவுளே தவமிருந்து
படைத்த பெண் நீ

விட்டு விட்டு தான் நினைக்கிறேன்…
விட்டு விட தான் நினைக்கிறேன்…
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது…
உன் அழகான நினைவுகள்…

பல மாயங்கள்
செய்கின்றாய்
விழிகளுக்குள்….
மாயக் கண்ணனாய்

உன்
வருகையை
நோக்கியே
என்
பார்வை….

உன் நினைவுகள்
தொற்றிக்கொள்ளும் போது
என் விழியிலும் பல கனவுகள்….

என்னிடம் பேசாதே என
சொல்வதற்கு
மட்டும்தான் உரிமை உண்டு
என்னைப் பற்றி
நினைக்காதே என
சொல்வதற்கு உரிமையே கிடையாது…

உன் மனதில்
யாரும் நுழையட்டும்
ஆனால் நீ
ஒதுக்கும் இடம்
எனக்கானதாக மட்டுமே
இருக்க வேண்டும்…

என்னை நீ
நினைக்க
மறந்தாலும்
உன் நினைவுகள்
கலந்தேயிருக்கும்
என் மூச்சிக்காற்றோடு

உன் நினைவில்
என் இரவும்
நீள்கிறது…

என்
நாழிகையும்
நலமாகவே
நகர்கிறது
உன்
நினைவுகளோடு

சில சமயங்களில்,
நான் சொல்வதை
நீ கேற்பதும்,
நீசொல்வதை,
நான் கேற்பதும்,
அன்பியலில்
அழகான புரிதல்…
புரிந்தால் பிரிவேது…

நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை.
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ…!!!!!

உன்னை உண்மையாக நேசித்த
இதயத்தை விட்டு பிரிந்து விடாதே.
எத்தனை இதயங்கள் உன்னை நேசித்தாலும்.
அந்த ஒரு இதயம் போல் ஆகாது…!

உன்னை சிறைபிடிக்க நினைத்து
நான் கைதி ஆனேன்
உன்னிடம்.

உன் காதல் கொடுத்த மயக்கத்தில்
நான் உளறுகிறேன்…!
கேட்பவர்கள் அதனை கவிதை என்கிறார்கள்…!

ஒவ்வொரு நொடியும் கடல் கரையை
கரைத்து செல்லும் கடல் அலைகள் போல்
உன் நினைவுகள் என் கண்களை
கரைத்து சொல்லுதடி கண்ணீரில்…

நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே.
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே…

உன் காத்திருப்புக்கள்
எனக்காக மட்டுமே
என்பதில் நானும் சுயநலகாரிதான்…

ஆர்ப்பாட்டங்கள் இல்லாத
உன் அன்பிற்கு
அடிமையானேன் நான்…

மறைந்தாலும்
தோன்றுவேன்
தேயும் நிலவாய்
அல்ல துளிர்விடும்
நினைவாய் உன்னுள்…

நீயில்லா
நேரங்களில்
உன்
நினைவுகளைத்தவிர
வேறெதற்கும்
அனுமதியில்லை
என்னருகில்……

எதையும் சொந்தமாக்கி கொள்ளும்
எண்ணம் இல்லை
உன் அன்பை தவிர…

அகதியாக நான்
அகப்பட்டு கொண்டேன்
உன் இதய தேசத்தில்…

தெளிவற்ற நிலையிலும்
தெளிவான உன் ஞாபகங்கள்….
(மலரும் நினைவுகள்)

Leave a Comment