Tamil Love SMS | தமிழ் லவ் எஸ் எம் எஸ் | Images

Here are the new updated Collection Tamil Love SMS, Love Quotes In Tamil, Tamil Kadhal Kavithai.

  • Love Quotes In Tamil
  • Tamil Kadhal Kavithai
  • தமிழ் காதல் கவிதை வரிகள்
  • அன்பு காதல் கவிதைகள்
  • காதல் கவிதைகள்

Tamil Love SMS

இரவில் வரும்
கனவைவிட உன்
நினைவில் வரும்
கனவிலேயே நான்
நிஜமாய் வாழ்கின்றேன்

உன் நினைவு
என்னைத்தீண்ட
பூக்களும்
நாணம் கொண்டு
தலைசாய்கிறது…

மழையென கொள்கிறேன்
உனை முழுமையாய்…
நனைத்து விடு
எனை
தினம் தினம்
உன் அன்பால்…
புரிதல்களால்

உனக்காக
எழுதும் வரிகளை
மனதுக்கே அஞ்சல்
செய்துகொள்கின்றேன்
வேறுயாரும்
ரசித்திட கூடாதென்று…

உனக்காகவேயென்
வேண்டுதல்
நீ நலமாயிருந்தால்
நானும் நலமே…

நீங்காமல்
நீயிருந்தால்
என் ஆயுளும்
நிலைத்திடுமே…

தொடும் தூர நிலவும்
நெடுந்தூரமானது
ரசிக்க நீயின்றி…

கடிகாரத்தினுள்
சுழலும் முள்ளைப்போல்
உன்னை சுற்றியே
என் நினைவுகளும்

நானும் ஓர்
சிலைதான்
உன்
நினைவுகள்
உரசிசெல்கையில்

என்னை நீ கண்களால் விலங்கிடு
அன்பால் சிறைபிடித்து
உன் இதயம் என்னும் சிறையில்
அடைத்து விட்டாய்யடி…!

நிலவு இல்லாமல் இரவு இல்லை
உன்—நினைவு—இல்லாமல்
என் நினைவும் இல்லை

அன்பே
நீ-தொட்டால்
தகரமும்-தங்கமாகும்
பூனையும்—-புலியாகும்
நான்-என்ன-ஆவேனோ…???

முப்பது நிமிடம் தாமதமாய் வந்த
என்னை திட்டுகிறாய் நீ…!
முப்பத் ஐந்தது வருடம்
தாமதமாய் வந்த உன்னை
எதுவுமே சொல்லாமல்
அனுசரித்துக் கொள்கிறது என் காதல்…!

யோசித்து எழுதும் கவிதைகள்
வெறும் வார்த்தைகள் ஆகிவிடுகிறது
நீ பேசும் வார்த்தைகள்
கவிதை ஆகிவிடுகிறது எனக்கு…!

போதை ஏற்றும் உன் கண்கள்
என் ஐம்புலன்களையும் அடங்கி
மூர்ச்சையாக்கி விடுகிறது என்னை

கடவுளிடம் தவமிருந்து பெறப்படும்
பெண்களுக்கு மத்தியில்
கடவுளே தவமிருந்து
படைத்த பெண் நீ

விட்டு விட்டு தான் நினைக்கிறேன்…
விட்டு விட தான் நினைக்கிறேன்…
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது…
உன் அழகான நினைவுகள்…

பல மாயங்கள்
செய்கின்றாய்
விழிகளுக்குள்….
மாயக் கண்ணனாய்

உன்
வருகையை
நோக்கியே
என்
பார்வை….

உன் நினைவுகள்
தொற்றிக்கொள்ளும் போது
என் விழியிலும் பல கனவுகள்….

என்னிடம் பேசாதே என
சொல்வதற்கு
மட்டும்தான் உரிமை உண்டு
என்னைப் பற்றி
நினைக்காதே என
சொல்வதற்கு உரிமையே கிடையாது…

உன் மனதில்
யாரும் நுழையட்டும்
ஆனால் நீ
ஒதுக்கும் இடம்
எனக்கானதாக மட்டுமே
இருக்க வேண்டும்…

என்னை நீ
நினைக்க
மறந்தாலும்
உன் நினைவுகள்
கலந்தேயிருக்கும்
என் மூச்சிக்காற்றோடு

உன் நினைவில்
என் இரவும்
நீள்கிறது…

என்
நாழிகையும்
நலமாகவே
நகர்கிறது
உன்
நினைவுகளோடு

சில சமயங்களில்,
நான் சொல்வதை
நீ கேற்பதும்,
நீசொல்வதை,
நான் கேற்பதும்,
அன்பியலில்
அழகான புரிதல்…
புரிந்தால் பிரிவேது…

நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை.
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ…!!!!!

உன்னை உண்மையாக நேசித்த
இதயத்தை விட்டு பிரிந்து விடாதே.
எத்தனை இதயங்கள் உன்னை நேசித்தாலும்.
அந்த ஒரு இதயம் போல் ஆகாது…!

உன்னை சிறைபிடிக்க நினைத்து
நான் கைதி ஆனேன்
உன்னிடம்.

உன் காதல் கொடுத்த மயக்கத்தில்
நான் உளறுகிறேன்…!
கேட்பவர்கள் அதனை கவிதை என்கிறார்கள்…!

ஒவ்வொரு நொடியும் கடல் கரையை
கரைத்து செல்லும் கடல் அலைகள் போல்
உன் நினைவுகள் என் கண்களை
கரைத்து சொல்லுதடி கண்ணீரில்…

நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே.
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே…

உன் காத்திருப்புக்கள்
எனக்காக மட்டுமே
என்பதில் நானும் சுயநலகாரிதான்…

ஆர்ப்பாட்டங்கள் இல்லாத
உன் அன்பிற்கு
அடிமையானேன் நான்…

மறைந்தாலும்
தோன்றுவேன்
தேயும் நிலவாய்
அல்ல துளிர்விடும்
நினைவாய் உன்னுள்…

நீயில்லா
நேரங்களில்
உன்
நினைவுகளைத்தவிர
வேறெதற்கும்
அனுமதியில்லை
என்னருகில்……

எதையும் சொந்தமாக்கி கொள்ளும்
எண்ணம் இல்லை
உன் அன்பை தவிர…

அகதியாக நான்
அகப்பட்டு கொண்டேன்
உன் இதய தேசத்தில்…

தெளிவற்ற நிலையிலும்
தெளிவான உன் ஞாபகங்கள்….
(மலரும் நினைவுகள்)

தேடவில்லை என்று வருந்தாதே
உன்னை தொலைத்தால் தானே தேடுவதற்கு…

எந்த மலரிலும்
உணரவில்லை
நீ கொடுத்த இந்த….
பூவின் நறுமணத்தை

ஒற்றை
முத்தத்தில்
அரங்கேற்றினான்
மொத்த….
ஆசைகளையும்

உன் கொஞ்சும்
மொழிகேட்டு
கூந்தலுக்கும்
நாணம் வர
நெளிந்து
வளைகிறது…

சொல்லத்தயங்கும்
ஆசைகளையெல்லாம்
கோர்க்கின்றேன்
உன்னிடம்
சேர்த்திட…

போர்வைக்கு
அடங்காத
குளிரும்
உன் தோள்சாய
அடங்கிப்போனது…

நீயின்றி
என்னுலகம்
நிறைவடையாது…

கடந்து
போகும்போதெல்லாம்
காதலை கலந்தே
போகின்றாய்
கண்களில்…

இமை கதவுகள்
மூடியதும் விழிவீட்டினுள்
நுழைந்துவிடுகிறாய்
கனவாக…

உன்
விழிகள் பேசிட
என்
மொழியும்
நாணம் கொண்டது…

என்னிதயம்
துடிக்க
உன் நினைவு
போதும்…

சிறகடித்து
பறந்த நான்
சிறைபட்டுப்போனேன்
உன் நினைவில்

தேய்பிறையாய்
நானிருந்தேன்
வள்ர்பிறையாய்
என் வாழ்வில்
வந்தாய்…

உனக்கான இதயம்
உன்னை ஒருபோதும் மறக்காது
அப்படி மறந்தால் அது
உனக்கான இதயமாக இருக்காது…!

உனக்கும் எனக்குமான அதிகபட்ச
எல்லைகளெல்லாம் தாண்டிவிட்டேன்.
இதற்கு மேல் பொறுமையில்லை
ஏதாவது ஒன்று சொல்.

நினைவுகள் பல சுமக்கும் இதயம்.
கனவுகள் பல காணும் மனது..
நீங்காமல் அலை மோதும் நினைவு…
உயிர் பிரிந்தாலும் பிரியாது உன் நினைவு…!

அன்று உன்னை மீண்டும் பார்க்க வேண்டும்
என்று தூக்கத்தை தொலைத்தேன்.
இன்று உன் நினைவுகளுடன்
துக்கத்தை தொலைக்க முயற்சிக்கிறேன்.

ஒரு பூவாக நீ மலர்கிறாய்…
ஒரு வண்டு போல் நான் நுழைகின்றேன்…
தேன் தேடும் வண்டுகள் போல் நான் இல்லை…
நீ சம்மதம் சொல்லும் வரை…

உனை
வர்ணிக்கும் போதே
கவிதையும்
கொஞ்சம் வெட்கப்படுகிறது

மனதின்
மையல்களை
மையில் கலந்து
விழியிலொரு
கவிதை
நீ ரசிக்க…

அருகில்
நீயில்லையென்று
மனதுக்கு தெரிந்தாலும்
எங்கோ உன் பெயர் ஒலிக்க
விழிகளும் தேடவே
செய்கிறது உன்னை…

வாடிய மலரைப்போல்
உயிறற்று கிடக்குறது
வாசிக்க நீயின்றி வரிகள்…

மயிலிறகாய்
உன் நினைவு
மனதை வருட
மறந்தே போகிறேன்
என்னை…

உன் எண்ணங்களின் வண்ணங்கள்
என் மனவானில் வானவில்லானது…

பலமுறை
முயற்சித்தும்
தோற்றுப்போனேன்
வீணையை மீட்ட….
உன் நினைவுகளென்னை
மீட்டிக்கொண்டிருப்பதால்

மனதுக்குள்
மலர்ந்தாய்
மலராய்….
மனமெங்கும்
மணக்கின்றது
உன் வாசனை….

விழிகள்
காத்திருப்பதும்
உனக்காக….
கண்ணீரும்
உனக்காக

கடவுளிடம்
வேண்டுதலென்று
எதுவுமில்லை
வரமாக நீ
கிடைத்ததற்கு நன்றி
சொல்வதை தவிர…

நினைக்க
மறந்த நொடியிலும்
ஏதோவொரு செயல்
உன்னை……
ஞாபகப்படுத்தியே
செல்கின்றது

என்வானில் வானவில் கூட
ஒரே வண்ணத்தில் தான் இருந்தது
நீ வந்த பின் தான் அது
ஏழு வண்ண வானவில் ஆனது…!!

பூக்களின் மென்மையாய் புன்னகையில் உண்மையாய்
தென்றலின் இனிமையாய் தியாகத்தின் வரமாய்
பிரபஞ்ச பேரண்டத்தில் வாழுகின்ற பேரழகியாய்
என் நினைவில் இன்றும் என்றும் நீ என் உயிராய்…!!!

விரட்டி அடித்தாலும்
விட்டு செல்ல மறுக்கின்றன…
நீ பார்த்துப் போன
அந்த ஒரு பார்வையின் நினைவுத் துளிகள்…

நீ உலக அழகி என்று
பொய் சொல்ல மாட்டேன்
ஆனால் என் உலகத்துக்கு
நீ தான் அழகி இது தான் உண்மை

உன்னை கண்ட நாள் முதல்
எனக்காக துடித்த இதயம்
உனக்காக துடிக்கிறது

என் வாழ்க்கையில் நீ
முன்னாடியே கிடைத்திருந்தால்
நான் யார் இடமும் பாசத்தை எதிர் பார்த்து
ஏமாந்து இருக்க மாட்டேன்…!

உன்னை நினைத்து இருப்பதும்
உனக்காக தவித்து இருப்பதும்
சுகம் தான்

பூக்களுக்கும்
கொண்டாட்டம்
இவள்
கூந்தலில்
தஞ்சம்
கொண்டதால்

நிகழ்வது உன்
மடியிலென்றால்
ஏற்பேன் மகிழ்வுடனே மரணம்…

என் தேடல்களில்
எப்போதும் முதலிடம்
உன் நினைவுகளுக்கே…

காற்றுக்கும்
கற்றுக்கொடுத்து
விட்டாயா….
கூந்தல்
கலைத்து
விளையாட

உன்னருகில்
மௌனம்
பேரழகு…

நீயில்லா இடம்
எப்போதும்
வெறுமையே
நீ வந்து
நிரப்பும் வரை

காத்திருப்பும்
சுகமே
உன் வரவுக்காக
என்பதால்

உன்னை புரிந்துக்கொண்ட
போதுதான் என்னுள்
உள்ள பிழைகளை உணர்ந்தேன்…

யாருக்காகவும் என்
வாழ்க்கையில்லையென்ற
எண்ணத்தை மாற்றி
உனக்காகவே என்
வாழ்க்கையென்று
காத்திருக்க வைத்துவிட்டாய்

தொலைத்தூரத்தில்
நானிருந்தாலும்
ஒருநொடி
போதும் எனக்கு
உன்….
நினைவுகளைத்தொட

துடிக்கும்
இதயமும்
உன்
பெயரைச்சொல்லியே
குதிக்கின்றது…

என்னோடு காத்திருந்து
நிலவும் தேய்ந்துப்போகிறது
உன்னை காணாது…

இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்…
பதில் நானும் தரும் முன்பே…
கனவாகி கலைந்தாய்…! என்னை நோக்கி பாயும் தோட்டா

நீ நடந்த பாதைகளில் நானும் நடக்கிறேன்.
நம் காதல் தான் ஒன்று சேரவில்லை.
நம் கால் தடங்களாவது ஒன்று சேரட்டும்…!

ன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு.
ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன்
இன்றி வாழ்கிறேன் உன்னுடன் நான்.

அழகிய பொம்மை என நினைத்து
கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.
நீ கண் சிமிட்டிய நொடியில்
கண் சிமிட்டா பொம்மையானேன் நான்…!

நிழலே வீழும் இருளாயினும்.
நீ என்ற ஒற்றை நம்பிக்கையில்
கை வீசி முன் நகர்கின்றேன்.
உடன் வருகிறாய் தானே…?

விடியலுக்கும் விழித்தலுக்கும்
இடையே உள்ள நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிப்பு செய்து கொள்(ல்)கின்றன
உன் நினைவுகள்டா…

எத்தனை துன்பம்
இருந்தாலும்
மறந்து போகிறேன்
உன்னோடு பேசும்
அந்த நேரத்தில் மட்டும்…

உன்னைத்தவிர வேறு என்ன
பெரிய வேண்டுதல் இருந்து விட
போகிறது எனக்கு…..

விண்ணில்
விளையாடும்
நிலவைப்போல்
என்னுள் விளையாடுகிறது
உன் நினைவு…

எழுதுகோலின்றி
பல கவிதைகள்
வடிக்கின்றது
உன் விரல்கள்

நிலவுக்கும்
ஒருநாள்
விடுதலையுண்டு
உன்
நினைவுக்கு
ஒருபோதும்
விடுதலையில்லை

தவிக்கவிடும்
தனிமையும்
உணர்த்துகிறது
உன் நெருக்கத்தை…

நிலவை அழகாக்கும்
இரவைப்போல்
மனதை அழகாக்குகிறது
உன் நினைவு…

மனதுக்கும்
மறதியுண்டாம்
அதை தினமும்
பொய்யாக்குகிறது
உன் நினைவு…

உன் கரங்கள்
குடையாக நனைந்தேன்
நானும் காதல் மழையில்

உன் காயத்துக்கு
மருந்து நான்
என் கண்ணீர்
துடைக்கும்
விரல்கள் நீ

உன் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம்
புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றேன் நான்
அதற்காகன அகராதியையும் நீயே எழுதிவிடு
உந்தன் கரு விழிகளால் என் அன்பே…

உன் பிடிவாதத்திடம் ஜெயிப்பதை விட…!
உன் அன்பிடம் தோற்பதையே
நான் விரும்புகிறேன்…!

எப்போதும் உன் கனவுகள்
எதை பார்த்தாலும் உந்தன் நினைவுகள்
கனவும் நினைவும் நிஜம் ஆவது எப்போது
என் உயிரில் கலந்த உயிரே…!

நிழலும்
நிஜமாகாதாயென
ஏங்குது மனம்
உன் பிம்பமெதிரே
தோன்ற….

சிறகிருந்தும்
சிறைபட்டிருக்கின்றேன்
உன் மனக்கூண்டில்…

இதமாக
வருடி செல்கிறது
உன் நினைவுகள்…
உனை
நினைக்கும்
போதெல்லாம்…
(இனிமையாக)

மை தீட்டி வந்தவளே…!
என் மனதை களவாடி சென்றவளே…!
மதி மயங்கி நின்றவனை…!
உன் மாய விழியால் வென்றவளே…!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே…!
நீ இமை சிமிட்டி பேசியதால்…!
என் இளமை சிதைந்து தான் போனதடி…!
இத்தனை அழகு உன்னிடம்…!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்…!

மாலை முடிந்தும் மறையாத சூரியன் – நீ..!
என் இதயத்தின் ஒளிவட்டம் – நீ..!
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் – நீ..!
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் – நீ..!
என் இரவுகளின் துளி வெளிச்சம் – நீ..!
ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை – நீ..!
என் இதயம் என் காதல் என் வாழ்க்கை – நீ தான்..!

கோடையும்
மார்கழியே
உன்னருகில்

உன் வருகையில்
என் உலகமும்
அழகு…

உன் வெட்கம்
எனக்கும்
துணிவை தந்தது
உன்னை ரசிக்க…

அத்தனை
இரைச்சலயும்
நிசப்தமாக்கி
உன் நினைவு
என்னை
தனிமையாக்கிவிடுகிறது

தொலைத்தூரத்தில்
இருந்தாலும்
அழகாகவே
காட்சி தரும்
நிலவைப்போல்
உன் நினைவும் அழகே

என்னைக்காண
காத்திருக்கும்
உன்
விழிகளுக்கு
விருந்தளிக்க
என்விழிகள்
பார்த்துக்கொள்கிறது
பலமுறை ஒத்திகை

தொலைவாய்
என தோன்றவில்லை…!!
தேடுதலில்
என் எண்ணமில்லை…!!
விலகியும்
நீடிக்கிறாய் என்னருகில்…!!
(பிரியாத – வரமாக)

மறுமலர்ச்சியாய்
மலரும் நினைவுகள்…
மதி மயங்கியே
போகிறேன்…
மயக்கிய
வார்த்தைகளால்…
அன்றும்
இன்றும்
என்றும்
தெளிவடையாமல்…
அன்புக்கு அடிமையாய்…

தோளில் சாயும்
நேரம் இவன்
விழிகளும்
கவிதை பேசும்…

மையில்
கிறுக்கப்படாத
பல கவிதைகள்
விழியில்
மையிட்டு
மையலோடு
காத்திருக்கு
நீ படிக்க…

தொடர்வதை
நிறுத்திவிடாதே
களைத்துவிடுமென்
பயணம்….

என்னை மறந்துவிடு
என்றவன் தன்னைமறந்து
விட்டுச்சென்றான் மனதை…

உன்னில்
கரைந்த
நிமிடங்கள்
நான்
ரசித்த
தருணங்கள்

நீ தோளில்
சாயும் நேரம்
என் சுமைகளும்
சுகமாய் மாறும்

நீ ரசிக்க
விழிகளில்
சிறு கோலம்…

அனுவளவு
விலகினாலும்
நொடிப்பொழுதில்
பிரிந்திடுமே
உயிர்

வானவில்லாய் நீ
வந்தாய்
வண்ணமானது
வாழ்க்கை

Leave a Comment