Tamil Kadhal Kavithai Sms | லவ் கவிதை | Images

Here are the new updated Collection Tamil Love Kavithai Lyrics, Love Quotes In Tamil Text.

  • Tamil Love Kavithai Lyrics
  • Tamil Love Quotes Text
  • Love Kavithai SMS

Tamil Kadhal Kavithai Sms

உன்னை சிறைபிடிக்க நினைத்து
நான் கைதி ஆனேன்
உன்னிடம்.

உன் காதல் கொடுத்த மயக்கத்தில்
நான் உளறுகிறேன்…!
கேட்பவர்கள் அதனை கவிதை என்கிறார்கள்…!

ஒவ்வொரு நொடியும் கடல் கரையை
கரைத்து செல்லும் கடல் அலைகள் போல்
உன் நினைவுகள் என் கண்களை
கரைத்து சொல்லுதடி கண்ணீரில்…

நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே.
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே

அன்பெனும் குழலை
வாசித்து பார்க்க
ஆசை அவன்
விழிகளில்

மௌனமாயிருந்தே
மனதை
கொள்ளையடித்தாய்

தொலைவில்
நீ சென்றால்
தொலைந்தே
போகின்றேன்
நானும்
உன் நினைவில்

பல சொந்தங்கள்
உனக்கிருந்தாலும்
உன்னிதயத்தின்
சொந்தம்
நானாகமட்டுமேயிருக்க
வேண்டும்

விலகியபோதும்
உன் நேசம்
இணைத்தது
நம் இதயத்தை

துளியாய்
கலந்துவிட்டாய்
மன கடலில்

உன் அன்பின்
பிரகாசத்தை
உணர்ந்தேன்
நீ எனக்காக
சேகரித்து தந்த
மின்மினியில்

கலங்கித்தான்
போகின்றது
கண்களும்
உன்னை
காணமலிருந்து
காணும்போது

கொண்டு
சென்றுவிடு
உன் நினைவுகளை
என்னை
கொன்று திண்கிறது

நானிருக்கின்றேனென்று
சொல்லாமல் சொல்லும்
உன் அரவணைப்பில்
உடைந்த மனமும்
நிறைந்தது

வானவில்லிலும்
காணாத
அழகிய நிறம்
உன்னில் கண்டேன்

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…

சோலையில்
பூத்ததல்ல
உதிர மனச்சோலையில்
பூத்தது மரணம்வரை
மலர்ந்திருக்கும்
காதல் மலர்

நினைவே
நீயானபின்
மனதுக்கு
ஏது ஓய்வு

கரையோடு
உரையாடும்
அலைப்போல்
கடலிருக்கும்வரை
தொடர்ந்திட வேண்டும்
நம் உறவும்…!

உனக்காக
தவிப்பதுதான்
காதலென்றால்
சுகமாக ஏற்றுக்கொள்வேன்
காலமெல்லாம்…!

கையளவு
இதயத்திலேயே
சுகமாக சுமந்திருப்பவனுக்கு
கரங்களில் மட்டுமென்ன
சுமையாகவா
தெரியபோகிறேன்

நீ சொல்லும்
மிஸ் யூவில்
தொலைகிறேன்
நானும்…!

அலங்கரித்த போதும்
ஒளியிழந்து போனேன்
உன் பார்வை
படாததால்…!

காண்பதற்கு
தடைபோட்ட போதும்
மனதுக்கு தாழ்போட
முடியவில்லை
உள்ளம் உன்னையே
நினைக்குது…!

மழைச்சாரலாய்
நீ அன்பை
பொழிய
வாழவேண்டுமென்ற
ஆசையும்
துளிர்விடுகிறது

என் எண்ணங்களில்
உதயமான அழகிய
வண்ணங்களின் வானவில்லாய்
தான் என் காதல்

உன்
இம்சைகளும்
ரசணையே
நீயில்லா
நேரங்களில்

மெல்ல மெல்ல
சாய்கின்றது
மனம் உன்பக்கம்
உன் விழிகளென்னை
வீழ்த்த…

எண்ணற்ற கவிதைகள்
எழுதினாலும்
உனக்காக கிறுக்கும்போது
மட்டுமே மனமும்
மகிழ்ச்சியில்
துள்ளிக்குதிக்கின்றது

குளத்தில் நீந்தும்
தாமரையைபோல்
மன ஓடையில்
நீந்துகின்றது
உன் நினைவு

உன்
தோள்சாய
சோகங்களும்
சொப்பனமாய்
கலையும்

வில்லின்றி
எய்தாய்
விழி அம்பை
துளைத்தது சுகமாய்
இதயத்தை

அடம்பிடிக்கும்
குழந்தையாய்
அடங்க மறுக்கின்றது
உன் நினைவு

தாமதித்து
தவிக்கவிடாதே
தாங்காது
இதயம்

எனக்காக
நீயிருக்கின்றாய்
என்ற உணர்வே
வாழ்க்கையை அழகாக்கி
கொண்டிருக்கின்றது
ஒவ்வொரு நொடியும்

காத்திருந்த
கனமான நிமிடமெல்லாம்
காணாமல் போனது
கண்கள் உனைக்காண

விலகாத அணைப்பு
மௌனங்கள் பேசும்
காதல் கரைகின்ற இரவில்
தொடர்ந்திட வேண்டும்

உறங்கும் போது
கனவிலும்
விடிந்தவுடன்
நினைவிலும்
வாழும் வரை
உயிரிலும் நீயே..
(இப்படிக்கு உன்னவள்)

நீ
வானவில்லாய்
இரு நான்
அதில் இருக்கும்
ஏழு நிறமாய்
இருப்பேன்..!
என்றும்
இணைப்பிரியாமல்…

காற்றை கண்ட
உடன் நடனமாடும்
மரங்களை போல
அவனை கண்டதும்
என் மனமும்
நடனமாடுகிறது…

எனக்குள்
தனிமையை
தவிடு பொடியாகி
விடுகிறது
உன் நினைவுகள்…

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து
நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

உன்னை
தேடி அலைந்திடும்
தேடலில் சுவாரஸ்யம்
குறையும் போது
உன் நினைவுகள்
என்னை தீண்டி
தேடலை அதிகப்படுத்துகிறது

உன்னை
மட்டும் அல்ல
உன் நினைவை
சுமப்பதும்
வரமே எனக்கு

பலமுறை துடித்தது
என் இமைகள்
உன்ணை பார்ப்பதற்கு
மட்டுமல்ல உன்ணை
என் விழிக்குள்
சேர்ப்பதற்கும்தான்

இரவை
பல வண்ணங்கள்
அழகாக்கி
கொண்டிருந்தாலும்
உன்னை காணும்வரை
என்மனம் இருளே

கரு மையும்
கவிதையாகும்
உன் கண்கள்
ரசித்தால்…!

பேச வந்த
வார்த்தையெல்லாம்
ஓசையின்றி போனது
உன் விழிமொழியில்
மயங்கி…!

என்னில் நீயாகி
உன்னில் நானாகி
நம்முள் நாமானோம்

எண்ணமெல்லாம்
நீயாக
வண்ணவுலகில்
நான்…!

நெற்றியில் நீ
திலகமிட
கண்ணங்களும்
சிவந்தது நாணத்தில்

உன்னில்
தொலைந்தபின்னே
புன்னகைக்கவும்
கற்றுக்கொண்டேன்

விண்ணில்
உலாவரும்
நிலவாய்
என்னுள் உலாவருகின்றாய்
நீ…!

என்னுலகமும்
முழுமையாகிறது
உன்னை அள்ளிக்கொள்ளும்
போது…!

மூச்சுமுட்டும்
நெருக்கத்தில்
இல்லாவிட்டாலும்
பார்வைபடும்
தூரத்திலேனுமிரு
என்னுயிர் வாழ…!

ஒளியிழந்த
விழிகளுக்கும்
கனவை தந்தாய்
கலைந்துவிடாதே
இருண்டுவிடும்
என்னுலகம்

சிக்கெடுக்கும்போது
மனம் சிக்கிக்கொண்டது
நீ கூந்தல்
கலைத்து விளையாடும்
நினைவுகளில்…!

மொழியில்
பேசிடு விழியில்
பேசி வீழ்த்தாதே

உனக்கான காத்திருப்பில்
உணர்ந்தேன்
உன்னில் நான்
தொலைந்திருப்பதை

தூறல் போடும்
மழையில்
உன் நினைவின்
சாரலென்னை
நினைத்தே செல்கிறது

சேராது
இரு திசைகளென
தெரிந்தும்
தேடி தொலையுது
விழிகள்

மை தீட்டி வந்தவளே…!
என் மனதை களவாடி சென்றவளே…!
மதி மயங்கி நின்றவனை…!
உன் மாய விழியால் வென்றவளே…!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே…!
நீ இமை சிமிட்டி பேசியதால்…!
என் இளமை சிதைந்து தான் போனதடி…!
இத்தனை அழகு உன்னிடம்…!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்…!

மாலை முடிந்தும் மறையாத சூரியன் – நீ..!
என் இதயத்தின் ஒளிவட்டம் – நீ..!
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் – நீ..!
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் – நீ..!
என் இரவுகளின் துளி வெளிச்சம் – நீ..!
ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை – நீ..!
என் இதயம் என் காதல் என் வாழ்க்கை – நீ தான்..!

இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்…
பதில் நானும் தரும் முன்பே…
கனவாகி கலைந்தாய்…!

நீ நடந்த பாதைகளில் நானும் நடக்கிறேன்.
நம் காதல் தான் ஒன்று சேரவில்லை.
நம் கால் தடங்களாவது ஒன்று சேரட்டும்…!

உன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு.
ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன்
இன்றி வாழ்கிறேன் உன்னுடன் நான்.

அழகிய பொம்மை என நினைத்து
கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.
நீ கண் சிமிட்டிய நொடியில்
கண் சிமிட்டா பொம்மையானேன் நான்…!

நிழலே வீழும் இருளாயினும்.
நீ என்ற ஒற்றை நம்பிக்கையில்
கை வீசி முன் நகர்கின்றேன்.
உடன் வருகிறாய் தானே…?

விடியலுக்கும் விழித்தலுக்கும்
இடையே உள்ள நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிப்பு செய்து கொள்(ல்)கின்றன
உன் நினைவுகள்டா…

கண்ணோடு
நீயிருப்பதால்
என்னோடு
நீயில்லையென்ற
எண்ணமே
எனக்கெழுந்ததில்லை

கற்பனையுலகும்
பிடித்துப்போனது
அதிலும்
நிலவைபோல்
நீயே உலா
வருவதால்

விட்டுவிட்டு துடிக்கும்
இதயமும்
விடாமல் துடிக்கின்றது
உன் தாமதத்தின்
காரணம் புரியாமல்

பூவோடு
சேர்ந்திருக்கும்
வாசத்தைபோல்
உன் நினைவோடு
சேர்ந்திருக்கு
என் சுவாசம்

மறக்க முடியாத
பிம்பம் நீ
தவிர்க்க முடியாத
நினைவும் நீ

நீயின்றி என் வாழ்க்கை
முடியப்போவது இல்லை
நீயின்றி வாழ்வு வந்தால்
நான் இருக்கப்போவதில்லை

என்னருகில்
நீயிருக்க
இருளேது
என் வாழ்வில்

எதையும்
ஆள வேண்டுமென்ற
ஆசையில்லை
உன் அன்பில்
ஆழ்ந்திருக்க
வேண்டுமென்ற
ஆசையை தவிர

அன்று உன்னை மீண்டும் பார்க்க வேண்டும்
என்று தூக்கத்தை தொலைத்தேன்.
இன்று உன் நினைவுகளுடன்
துக்கத்தை தொலைக்க முயற்சிக்கிறேன்.

ஒரு பூவாக நீ மலர்கிறாய்…
ஒரு வண்டு போல் நான் நுழைகின்றேன்…
தேன் தேடும் வண்டுகள் போல் நான் இல்லை…
நீ சம்மதம் சொல்லும் வரை…

நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை.
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ…!!!!!

உன்னை உண்மையாக நேசித்த
இதயத்தை விட்டு பிரிந்து விடாதே.
எத்தனை இதயங்கள் உன்னை நேசித்தாலும்.
அந்த ஒரு இதயம் போல் ஆகாது…!

விட்டு விட்டு தான் நினைக்கிறேன்…
விட்டு விட தான் நினைக்கிறேன்…
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது…
உன் அழகான நினைவுகள்…

உனக்கான இதயம்
உன்னை ஒருபோதும் மறக்காது
அப்படி மறந்தால் அது
உனக்கான இதயமாக இருக்காது…!

உனக்கும் எனக்குமான அதிகபட்ச
எல்லைகளெல்லாம் தாண்டிவிட்டேன்.
இதற்கு மேல் பொறுமையில்லை
ஏதாவது ஒன்று சொல்.
பொறுப்பதா? இருப்பதா? இறப்பதா?

நினைவுகள் பல சுமக்கும் இதயம்.
கனவுகள் பல காணும் மனது..
நீங்காமல் அலை மோதும் நினைவு…
உயிர் பிரிந்தாலும் பிரியாது உன் நினைவு…!

Read More: Marathi Suvichar

Tamil Kadhal Kavithaigal

Birthday Wishes In Marathi

Leave a Comment