Friendship Quotes in Tamil | நட்பு கவிதைகள் | Images

Here are the new updated Collection Friendship Quotes in Tamil, Friendship Kavithaigal in Tamil.

  • நட்பு கவிதை
  • Friendship Kavithaigal in Tamil
  • Natpu Kavithaigal
  • Tamil Friendship Quotes
  • Kavithai Mazhai
  • tamil kavithaigal about friendship
  • நட்பு கவிதைகள்

Friendship Quotes in Tamil

நல்ல நண்பனை அடைய
விரும்பினால் நீயும் நல்லவனாக
இருக்க வேண்டும்.

நீ என்னிடம் பேசியதை விட
எனக்காக பேசியதை தான்
உணர்தேன் நமக்கான நட்பை.

உன் வீட்டில் வந்து சாப்பிட்டு
உறங்கி போய் உன் தம்பியாகவே
தொடங்கியது நம் நட்பு.

முகம் பாராது முகவரி கேளாது ஒரு
சொல் பேசாது எங்கிருந்தோ
வந்து இணைந்த நட்பே!

நட்பை விலைக்கு வாங்கவே
முடியாது தகுதியானவர்க்கு
இலவசமாகவே வழங்கப்படுகிறது

காதல் இல்லைனா வாழ்க்கை
தான் பிடிக்காது ஆனால் நண்பன்
இல்லைனா வாழவே பிடிக்காது

உப்பு இருந்தால் தான் உணவு
சுவைக்கும் அதுபோல நட்பு
இருந்தால் தான் வாழ்க்கை சுவைக்கும்

மனைவி கடவுள் தந்த வரம்
தாய் கடவுளுக்கு நிகரான வரம்
ஆனால் நண்பன் கடவுளுக்கு கூட
கிடைக்காத வரம்!

வேரூன்றி நிற்கும்
பெரிய மரத்தை போல
நம் நட்பின் ஆழம்
இன்னும் சென்று கொண்டே
இருக்க வேண்டும்.

தினம் ஒருமுறை
தோல்வி பெற விரும்புகிறேன்
என் தோழன் என் தோளில் தட்டி
ஆறுதல் சொல்வதை எதிர்பார்த்து.

ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்
ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்
நண்பர்கள்!

தொலைதூரம் சென்று மறைந்தாலும்
மனதை விட்டது என்றும் மறைவதில்லை
பள்ளி நாட்களில் அரட்டை அடித்ததை

பள்ளி முடிந்து என் நண்பனுடன்
சைக்கிளில் வீட்டுக்கு சென்ற மகிழ்ச்சி
இப்பொது கார்களில் சென்றாலும் கிடைப்பதில்லை.

சொந்தம் என்பது பனித்துளி போல
நொடியில் மறைந்து போகும்
ஆனால் நம் நட்பு என்பது ஆகாயம் போல
என்றுமே நிலைத்து நிற்கும்.

ஒரு துளி கண்ணீரை
துடைப்பது நட்பு இல்லை
மறு துளி வரமால் தடுப்பது தான்
உண்மையான நட்பு!

துரியோதனனை போல
நண்பனை தேர்ந்தெடு
உலகிற்கு கெட்டவனாக இருந்தாலும்
உனக்காக கடைசிவரை போராடுவான்.

ஒரு பெண் தோழியிடம்
உண்மையாய் நட்பு கொண்டு பாருங்கள்
அன்னையின் அன்பை உணருவீர்கள்.

உன் நண்பன் தவறு செய்தால்
மன்னித்து விடாதே,மறந்து விடு
ஏனெனில் அவர்கள் உன் உறவுகள் இல்லை
உணர்வுகள்!

கணவனுக்கு சிறந்த
தோழியாக மனைவியும்
மனைவிக்கு சிறந்த
தோழனாக கணவனும்
இருக்கும் போது வாழ்க்கை
சிறப்பானதாக அமையும்.

தவறுகள் செய்யும் போது
தட்டிக் கேட்கும் நட்பு தான்
உண்மையான நட்பின்
அடையாளம்.

உண்மையான நட்பை
பெறுவது என்பது
கடினமான விடயம் தான்
ஏனென்றால் வரையறை
அற்ற அன்பை கொண்டது
தான் உண்மையான நட்பு.

அருகில் இருக்கும் போது
நட்பின் அருமை சிலருக்கு
புரிவதில்லை. நட்பை
பிரிந்து இருக்கும் போது
தான் அதன் ஆழம் புரியும்.

கனவில் காண்பது அல்ல
நட்பு. மனதில் வைத்து
மரணம் வரை நேசிப்பது
தான் நட்பு. உண்மையான
நட்பு உயிர் உள்ள வரை
உன் கூடவே வரும்.

உறவுகள் உன் முகத்தில்
தெரியும் அழுகையை
கண்டு ஆறுதல் சொல்லும்.
நட்பு உன் அழுகைக்கு பின்
இருக்கும் காரணத்தை
கண்டறிந்து சரி செய்யும்.

எதிர்பார்ப்புகளே இல்லாமல்
இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு.

நட்பு என்பது மூன்றேழுத்தில்
முடிவதல்ல நம் வாழ்க்கை முடியும் வரை.

வரிகளால் விளக்க முடியாதது
வாழ்க்கை,வாழ்க்கையை விளக்குவது நட்பு.

உலகமே உன்னை கைவிடும்
போது உன்னோடு இருப்பவன்
தான் நண்பன்.

எதையும் செய்ய கூடிய நட்பு
கிடைத்தும் அதை உபயோகித்து
கொள்ளாததில் இருக்கிறது நட்பின் அழகு!

ஒரு காலத்தில்
சந்தோச பறவைகளும்
நட்பு பறவைகளும்
குடியிருந்த நினைவு கூடு
பள்ளிக்கூடம்!

கர்ணனை போல
நண்பனை தேர்ந்தெடு
ஆண்டவனே எதிர்த்தாலும்
உனக்காக உயிரையே தருவான்.

பழகும் முன் தனிமை
பழகிய பின் இனிமை
பிரிவு என்பதோ கொடுமை
பிரிந்தபின் தான் தெரியும்
நட்பின் அருமை!

நீ வாழ்க்கையில் உயரும் போது
நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள்
ஆனால் நீ கீழே வரும் போது
உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிவாய்.

சண்டை போட்டு நாலு நாள் பேசாமல் இருந்து விட்டு
அடுத்தநாள் எதுவும் நடக்காதது போல் பேசும் நட்பு
கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கம்!

அறிமுகம் இல்லாமல் வந்தோம்
அடிக்கடி பேசி கொண்டோம்
உறவுகளுக்குமேலே உயிர் ஆனோம்
காலங்கள் கடந்து போனாலும்
கடைசி வரை தொடர வேண்டும் நட்பு!

பூக்கள் என்பது உதிரும் வரை
இரவு என்பது விடியும் வரை
உறவு என்பது பேசும் வரை
பிரிவு என்பது இணையும் வரை
நட்பு என்பது உயிர் உள்ள வரை!

நிலையான அன்பிற்கு பிறிவில்லை
சொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை
தேடும் அன்புக்கு தோல்வியில்லை
உண்மையான நம் நட்புக்கு மரணமில்லை!

காரணம் இல்லாமல் களைந்து போக
இது கனவு இல்லை!
காரணம் சொல்லி பிரிந்து போக
இது காதலும் இல்லை!
உயிர் உள்ளவரை தொடரும்
உண்மையான நட்பு!

ஒரு பெண் யாரிடமும்
எல்லாவற்றையும்
அவ்வளவு எளிதாக சொல்வதில்லை
அப்புடி சொன்னால்
நீயே சிறந்த நண்பன்!

ஆயிரம் உறவு இருந்தாலும்
ஆணுக்கு தோழியின் அன்பும்
பெண்ணுக்கு தோழனின் அன்பும்
கிடைத்தால் வாழ்க்கை அழகாக இருக்கும்!

ஆண் பெண் நட்பு
தண்ணீரில் கலந்த
எண்ணெய் போல
கலந்து இருப்பது போல் தெரிகிற
களங்கம் இல்லா உறவு!

ஒரு நல்ல தோழி மட்டும் இருந்தால் போதும்
தோல்வியையும் துவட்டி போட்டு விடலாம்

ஒரு பெண்ணிற்கு
வழித்துணையாக வருபவன்
கணவனாகவோ
காதலனாகவோ
தான் இருக்க வேண்டும் என்பதில்லை
கண்ணியம் தவறாத
நல்ல நண்பனாகவும் இருக்கலாம்.

உண்மையான உறவுகள்
கடவுள் தந்த வரம் என்று
சொல்லுவார்கள். ஆனால்
உண்மையான நட்பு
கடவுளுக்கு கூட
கிடைக்காத வரம்.

உன் நண்பனை உனக்கு
பிடிக்கவில்லை என்றால்
எதிரியாக கூட மாறி விடு.
ஆனால் துரோகியாக
மாற நினைத்து கூட
பார்த்து விடாதே.

புன்னகை என்ற முகவரி
உங்களிடம் இருந்தால்
நண்பர்கள் என்ற கடிதம்
உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.

நம்மை பற்றி நமக்கே
தெரியாத ரகசியங்களை நமக்கே
வெளிச்சம் போட்டு காட்டும்
சிறந்த கருவி தான் நட்பு!

பிரிந்து விட்டால் இறந்து விடுவோம்
இது காதல்!
இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவோம்
இது தான் நட்பு!

உன் நண்பனுக்காக
எதை வேண்டுமானாலும்
விட்டு கொடு ஆனால்
எதற்காகவும் உன் நண்பனை
விட்டு கொடுக்காதே.

இன்றுனை
தூக்கி வைத்திருப்பவர்
ஒருநாள் இறக்கியும் விடலாம்
எறிந்தும் விடலாம்
இரண்டுக்கும் தயாராக இரு

அவரைப்போல்
இவரைப்போல்
எவரைப்போலும்
நகலெடுத்து வாழ
முயற்சிக்க வேண்டாம்
நாம் நாமாக வாழுவோம்

இன்று யார்
விட்டுச்சென்றாலும்
கவலையின்றி சாதாரணமாக
வாழ்பவர்கள் தான்
ஒரு சமயத்தில்
சிறிது நேர பிரிவிற்கே
நாள்முழுக்க
அழுது தீர்த்திருப்பார்கள்

ஒருவரை
காயப்படுத்துவது என்பது
ரொம்ப சுலபமான ஒன்று
அவை ஒரு நாள் நம்மையும்
காயப்படுத்தும்
என்பதை உணராமல்
இருப்பது தான் அறியாமையே

ஒருவர் கஷ்டப்படும்
காலத்தில் தான்
பலரின் உண்மை முகம்
காண்கிறார்கள்

மற்றவர்களின்
வாழ்க்கையை கண்டு
அவர்கள் போல்
வாழ வேண்டும்
என்று ஆசைபடாதீர்கள்
அவரவர் வாழ்க்கையில்
உள்ள அவஸ்தையை
அவர்கள் மட்டுமே
அறிவார்கள்

இன்னொரு ஜென்மம் எடுக்க போவதில்லை
நீயும் நானும் பேச இருக்கும் நாட்கள் தான் நமக்கு சொந்தம்
தொலைவில் இருந்தாலும் தொடரட்டும்
நம் நட்பு என் இறுதிவரை!

என் நண்பன்!
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேச மறந்தாலும் வாசம் மாறி போகாது!
வருடம் பல கழிந்தாலும் வரவேற்பு குறையாது!
வசதி வந்தாலும் மாமா மச்சான் மாறாது.

முதல் வயதில் நான் அறிந்த
மூன்றேழுத்து அம்மா!
பருவத்தில் நான் அறிந்த
மூன்றெழுத்து காதல்!
குடும்ப வயதில் நான் அறிந்த
மூன்றெழுத்து மனைவி!
சாகும் வரை நான் அறியும் மூன்றெழுத்து
நட்பு!

தோள் கொடுக்க தோழனும்
தோள் சாய தோழியும் கிடைத்தால்
அவர்கள் கூட தாய் தந்தை தான்!

தொடாமல் பேசுவது
காதலுக்கு அழகாம்
தொட்டு பேசுவது நட்புக்கு அழகாம்!

நான் கலங்கி நின்றாள்
மாடி கொடுப்பாள்
என் அம்மாவுக்கு அடுத்து
என் தோழி!

தாயிடம் கூட சொல்ல முடியாத விஷயங்களை
தோழியிடம் சொல்ல முடியும்!

நான் உன் உயிர் தோழனாக
இல்லாமல் இருக்கலாம் ஆனால்
என் உயிர் உள்ளவரை
நல்ல தோழனாக இருப்பேன்!

ஆறுதல் கூற தோழி இருந்தால்
அலுவதில் கூட ஆனந்தம் உண்டு.

மகிழ்வாய் வாழ்பவர்களுக்கு
பெரும்பாலும்
மாறுவேடத்தில் தான்
வருகிறது துன்பங்கள் யாவும்

நன்றாக பழகும்
அனைவரும் நண்பர்கள்
இல்லையென்ற சிறு தெளிவு
இருந்தால் போதும்
சில துரோகங்களையும்
பல மாற்றங்களையும்
தவிர்க்கலாம்

கவலைகளை மட்டும்
மிகச் சுலபமாய்
வெளிக்காட்டி மற்றவரோடு
பகிரும் நம்மில் பலர்
மகிழ்ச்சியை பங்கிட்டு
கொள்ள விரும்புவதில்லை

சிறிய தவறைக் கூட
நியாயப் படுத்தாதீர்கள்
அதைப்போல
பெரிய தவறு
வேற எதுவுமே இல்லை

ஒன்னு கடந்து போகனும்
இல்லைனா
கண்டுக்காம போக
கத்துக்கிடனும்
அப்போ தான் நம்ம life
கலகலப்பா இருக்கும்

எல்லோரையும்
புரிந்து கொள்ள
முயற்சிக்கும் போது
அங்கு நம்மை
புரிந்து கொள்ள
யாருமில்லை என்பதை
நாம் உணர்வதேயில்லை

எத்தனை சோதனைகள் வந்தாலும்
சகித்துக்கொண்டு கடந்துவிடு
புன்னகையால் மட்டுமல்ல
கண்ணீர் சிந்தாத இமையாளும்

சரியோ தவறோ
தைரியமாக எதையும்
வெளிப்படையாக
பேசுபவர்கள்
யாருக்கும் துரோகியாக
இருக்க மாட்டார்கள்

இருப்பதை வைத்து
சிறப்பாக
வாழத் தெரியாவிட்டால்
எதைக் கொடுத்தாலும்
திருப்தியான வாழ்க்கையை
வாழவே முடியாது

நாம் அதிகமாக
ஏமாறுவது
நம்பியவர்களிடம் தானே
தவிர
அன்னியமானவர்களிடம் அல்ல

அனைவரிடத்திலும்
நாம் எப்படி தான்
ஒரே விதமாக
நடந்து கொண்டாலும்
நம்மை பார்க்கும் பார்வைகள்
பல விதமாக தான் இருக்கும்

கண்ணுக்கினிய இயற்கையும்
கண் காணாத தென்றலுமே
பல நேரங்களில்
சில சோகங்களை
மறக்கச் செய்கின்றது

சிதறி அழியும்
வார்த்தைகளை
சிந்துவதை விட
மௌனம் சிறந்தது

வாழ்க்கையில
சில விஷயங்கள்
சரியாகிவிடும்
என்பதை விட
பழகிவிடும்
என்பதே நிஜம்

வாழ்க்கையிலும் சரி
வாட்ஸ்அப்லயும் சரி
எல்லோரும் பாக்குறது
Status மட்டும் தாங்க

எத்தனை நாட்களானால்
என்ன
தொலைத்த இடத்தை
கடக்கும்பொழுது
சில விநாடிகள்
இழந்ததை தேடவே
துடிக்கிறது கண்கள்

எவ்வளவு
கோபம் வந்தாலும்
வார்த்தைகளை விட்டுடாதீங்க
அடிகளை விட
அது தரும் வலிகள் அதிகம்
பிறகு எத்தனை முறை மன்னிப்பு
கேட்டாலும் அந்த காயம் ஆராது

பிடித்தவர்கள் என்றாலும்
அவர்கள்
நம்மைப் பற்றி கூறும்
விமர்சனங்கள் மனதிற்கு
பிடிப்பதில்லை

நீ மேலே உயரும் போது
நீ யார் என்று உன்
நண்பர்கள் அறிவார்கள்.
ஆனால் நீ கீழே விழும்
போது தான் உன்
உண்மையான நண்பர்கள்
யார் என்பதை நீ அறிவாய்.

உறவுகளில் தூரத்து
சொந்தம் போல நட்பில்
தூரத்து நட்பு இல்லை.
காரணம் நட்பு எனும்
உறவுக்குள் வந்த பின்
யாரும் தூரமில்லை.

பால்ய பருவம்
பள்ளி பருவம்
இளமை பருவம்
முதுமை பருவம்
எல்லாவற்றிலும் பயணித்த
நல்ல நண்பன் நீ!

நட்புக்கு வயது அவசியம் இல்லை
பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும்
உன்னதமான உறவே நட்பு!

நட்பு என்பது குழந்தைபோல
இன்பத்திலும் துன்பத்திலும்
நம்மை விட்டு பிரியாமல்
புன்னகையோடு இருக்கும்.

நேரம் ஒதுக்கி
பேசுபவர்களிடம் பழகுங்கள்
வேலைகளை
ஒதுக்கி வைத்து விட்டு
பேசுபவர்களை நேசியுங்கள்

எல்லோருக்கும்
பிடிக்குற மாதிரி
நாம இருப்போமானு
தெரியல
ஆனா நம்மளையும் பிடிக்கிற
சில பேர்கிட்
நாம உண்மையா
இருந்தாலே போதும்

நடப்பதெல்லாம் நல்லதுக்கே
என்று மட்டும்
நினைத்து விடாதே
நடக்காதது கூட
நல்லதுக்குத் தான்
மறந்து விடாதே

மற்றவரின் மகிழ்ச்சியில்
மகிழ்ச்சி காணும்
மனிதனாக இருங்கள்
மற்றவரின் மகிழ்ச்சிக்காக
உங்கள் மகிழ்ச்சியை
தொலைக்கும் முட்டாளாய்
இருக்காதீர்கள்

அழகான மனிதர்களை
நினைத்து ஏங்காதீர்கள்
பிறகு அன்பான
மனுதர்களை நினைத்து
அழ வேண்டி வரும்

பிடித்தாலும்
பிடிக்கவில்லை என்றாலும்
ஜெயித்தாலும் தோற்றாலும்
கட்டாயம் விளையாண்டே
தீர வேண்டும்
வாழ்க்கை என்னும்
விளையாட்டு மைதானத்தில்

விளையாட்டாக
பேசினாலும்
வம்பில் முடிவது
ஒரு வித புரிதல்
குறை பாடு தான்

கல்வி சுமையால்
தேய்பிறையாய் இருந்த எங்களை
இதய சுமையால்
வளர்பிறை ஆகியது இந்த நட்பு!

நட்பு எப்போதுமே வித்தியாசமானது
சில நேரங்களில் அழுத நாட்களை சிரிக்க வைக்கும்
சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கும்.

கவிதை என்பது யோசிப்பது
காதல் என்பது நேசிப்பது
நட்பு என்பது சுவாசிப்பது
யோசிக்காமல் நேசிக்கலாம் ஆனால்\
சுவாசிக்காமல் இருக்கவே முடியாது.

உண்ணும் கையின் மேற்புறத்தில்
என் பெயரை அவள் பச்சை குத்தினால் அது கவிதை!

நிர்வாணத்தை..,
துய்ப்பது காமம்,
ரசிப்பது காதல்,
மறைப்பது நட்பு !!

காதலடி நீயெனக்கு காந்தமடி நானுனக்கு
வேதமடி நீயெனக்கு வித்தையடி நானுனக்கு
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே
நாதவடி வானவளே நல்லஉயிரே கண்ணம்மா
மகாகவி

உன்னோடு பருகும்
ஒரு கோப்பை தேனீருடன்
இப்படியே நீளாத இந்நாள்…

பலமில்லாத போது
பகை கொள்ளாதே
பலமான பின்
திமிர் கொள்ளாதே
இரண்டும் நிம்மதியை
இழக்க செய்து விடும்

எப்போதும் இளமையாக
இருக்க முடியாது
ஆனால்
எப்போதும் அழகாக
இருக்க முடியும்
சிரித்தால்

பிறரின் தேவைக்கு
சேவை செய்யும்
வரை நீங்கள்
பிடித்தமானவர்
இல்லையெனில்
மிதித்தே மக்கப்படுவீர்
அவர்களது மனதில்

சரியோ தப்போ
தைரியமா பேசனும்
பதில் சொல்ல பயந்தாலே
பாதி தப்ப நம்ம தலையில
கட்டிருவாங்க

கஷ்டமும் நஷ்டமும்
போகப்போக சரியாகிவிடும்
என்பார்கள் ஆனால்
அப்படியெல்லாம்
ஒன்றுமில்லை எல்லாம்
போகப்போக பழகிவிடும்
அவ்வளவு தான் வாழ்க்கை

யாரிடமும் சொல்லாதே
என்று நீங்கள் யாரிடமோ
கூறிய ரகசியம்
நிச்சயமாக யாரிடமோ
விவாதிக்கப்பட்டு கொண்டு
தான் இருக்கும்

சிதறிவிடும் என்பதற்காக
தேங்காயை உடைக்காமல்
வைத்திருந்தால் அழுகிவிடும்
அப்படித்தான்
சில நேரங்களில்
நமக்குள் வைத்திருக்கும்
சில எண்ணங்களும்

இங்கே உண்மையில்
யாராலும் யாரின்
இடத்தையும் நிரப்பவும்
இயலாது
மறக்கச் செய்யவும்
இயலாது